இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக இருக்கும் தெலுங்கு நடிகரே அல்லு அர்ஜுன்.
2003ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'கங்கோரி' திரைப்படத்தின் மூலமே சினிமாத்துறைக்குள் நுழைந்த இவருக்கு, முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவரது அருமையான நடிப்பினாலும் அசத்தலான நடனத்தினாலும் தெலுங்கு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இந்திய அளவில் டாப் 10 டான்சிங் நடிகர் பட்டியலில் இவரும் உள்ளார்.
இவ்வாறு முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த இவருக்கு, மேலும் புகழை பெற்றுக் கொடுத்து 'புஷ்பா' திரைப்படம்.
இந்த நிலையில், தற்போது துபாயில் உள்ள 'மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பிரபலமான அரசியல் வாதிகள் , விளையாட்டு வீரர்கள் , நடிகர்கள் போன்றவர்ளின் உருவத்தை மெழுகின் மூலம் தத்துரூபமாக செய்து வைக்கும் ஒரு அருங்காட்ச்சியகமே துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ்.
தற்போது அங்கு உள்ள தனது உருவத்தை ஒத்த மெழுகு சிலையை திறந்து வைத்து, இதனை ஒரு மைல்கல் நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார் அல்லு அர்ஜுன். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதேவேளை, குறித்த அருங்காட்சியகத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் ஆகிய இந்தி நட்சத்திரங்களின் சிலைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!