தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இந்தியன். இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறதுஇந்த படத்தின் படப்பிடிப்புக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அவர் பயிற்சி எடுத்து திரும்பி வந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த நிலையில் தற்போது அவர் திருமணமாகி குழந்தை பெற்றதால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் காஜல்அகர்வால் கேரக்டரில் நடிக்க தீபிகா படுகோன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது .
அதே போல் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் காலமாகி விட்டதால் அவருக்கு பதிலாக நடிக்கும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- 1950-ல் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் முதல் பிரதியைப் பார்த்திருக்கின்றீர்களா?
- ரஜினி சேர் 4 தடவையும் போன் பண்ணி விஸ் பண்ணிட்டார்- ரகசியத்தை உளறிய லோகேஷ் கனகராஜ்
- அதர்வா பட இயக்குநரை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்- அடடே இது தான் காரணமா?
- சீரியலில் மட்டும் தான் இந்த அடக்க ஒடுக்கமா?- முத்தழகு சீரியல் கதாநாயகியை மாடர்ன் உடையில் பார்த்திருக்கின்றீர்களா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!