• Sep 20 2024

துணிவு படம் அப்படி இருக்காது - புதிய டுஸ்ட் வைத்த இயக்குநர் வினோத்..!- கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நேர்கொண்டப்பார்வை மற்றும் வலிமை படங்களை தொடர்ந்து எச் வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து அஜித் நடித்து வரும் திரைப்படம் தான் துணிவு.இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகின்றார்.

இப்படத்தின்  ஒவ்வொரு விஷயங்களையும் படக்குழு பார்த்து பார்த்து செய்து வருகின்றது. சதுரங்கவேட்டை, தீரன் படங்களை தொடர்ந்து இயக்குநர் வினோத் மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து துணிவு கதையை உருவாக்கி வருவதாக பேசப்பட்டு வந்தது. மேலும் பஞ்சாப் வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருவதாகவும் தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது


இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இயக்குநர் வினோத் துணிவு படத்தை பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக அவர் படத்தின் கதையை பற்றி பேசுகையில், இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவில்லை என்றும், இப்படம் பஞ்சாப் வங்கி கொள்ளையை பற்றிய கதை இல்லை எனவும் தெரிவித்தார்.

 இருப்பினும் இப்படத்தின் கதை அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும் படி ஒரு சிறந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார் வினோத்.அத்தோடு இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்பதும குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement