தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூலிலும் அள்ளிக் குவித்திருக்கின்றது.
தற்போது இவர் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு.இப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா பாடல் வெளியாகி நல்ல வரவேபை பெற்றது. இப்படத்தின் ட்ரெய்லரை வரும் 31ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துணிவு படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் "காசேதான் கடவுளடா" என ட்வீட் செய்து அப்டேட் கொடுத்துள்ளார்.
எனினும் இதைத்தொடர்ந்து ரசிகர்கள் #காசேதான்-கடவுளடா என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Listen News!