• Nov 14 2024

இப்படியே போனால் 500 கோடியை தொட்டிருக்கலாம்.. அவசரப்பட்டுவிட்டோமே? வருத்தப்படும் விஜய்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் சம்பளம் தற்போது 250 கோடியை தொட்டு இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில வருடங்களில் இப்படியே போனால் 500 கோடி சம்பளம் உயர்ந்திருக்கும், தேவை இல்லாமல் அவசரப்பட்டு அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிட்டு விட்டோமே என்று விஜய் தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்குவதாக அறிவித்த நிலையில் ஒரு பிரஸ்மீட் கூட வைக்காமல் உடனடியாக ’கோட்’ படத்தின் படப்பிடிப்புக்கு சென்று விட்டார். இந்த நிலையில் தன்னுடைய அரசியல் கட்சி ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பார்த்த நிலையில் ஓரிரு நாளை தவிர அவருடைய அரசியல் கட்சி குறித்து யாருமே பேசவில்லை. 

அதுமட்டுமின்றி திடீரென தேர்தல் அறிவிப்பு வந்துவிட்ட நிலையில் இந்த தேர்தலில் போட்டியில்லை என்று விஜய் கூறிவிட்டதால் ஊடகங்கள் அவருடைய கட்சியை பற்றி கண்டுகொள்ளவே இல்லை என்றும் பொதுமக்களும் அவருடைய அரசியல் கட்சியை கிட்டத்தட்ட மறந்து விட்டதாகவே கூறப்படுகிறது. 



இந்த நிலையில் அவசரப்பட்டு அரசியலில் அறிவிப்பை வெளியிட்டு விட்டோம் என்றும் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் என்றும் விஜய் தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

உடனடியாக அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் தான் அவசரப்பட்டதாகவும், அவருடைய பேச்சைக் கேட்டு தற்போது தனக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளாராம். அதுமட்டுமின்றி தான் சினிமாவை விட்டு விலகப் போகிறோம் என்று தெரிந்தவுடன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் தன்னுடைய இடத்தை பிடிக்க திட்டமிட்டு கொண்டிருப்பதையும் விஜய் ரசிக்கவில்லையாம். 

ரஜினி இடத்தை பிடித்த நம்முடைய இடத்தையும் ஒருவர் பிடித்து விடுவாரோ? ஒருவேளை அரசியல் பெயிலியர் ஆகி மீண்டும் வந்தால் தனக்குரிய இடம் கிடைக்குமா? என்ற ஆதங்கமும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி ’கோட்’ படத்தை இதுவரை எடுத்த காட்சிகளை பார்த்தபோது அவருக்கு திருப்தி இல்லை என்றும் இந்த படம் ஒருவேளை தோல்வி அடைந்தால் தனது இமேஜ் சரியும் என்றும் அவர் மனதுக்குள் வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. 


மொத்தத்தில் அரசியல் குறித்த அறிவிப்பை அவசரப்பட்டு எடுத்து விட்டோம் என்ற எண்ணம் தான் தற்போது விஜய்க்கு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement