• Sep 20 2024

தளபதி விஜய்க்கு 10 வது முறையாக வில்லனாகும் பிரபல நடிகர்- தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் 2019-ல் 'மாஸ்டர்' படத்திற்காக முதன்முறையாக இணைந்தனர். இந்தப் படத்தின் வெளியீடு கொரோனா வைரஸ் காரணமாக 2021-க்கு தள்ளிப்போனது. ஆயினும்கூட, ஆக்‌ஷன் நிறைந்த மாஸ்டர் படம் ரசிகர்களைக் கவர தவறவில்லை.

இதையடுத்து மீண்டும் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைவதாகக் கூறப்பட்டது. பின்னர் லோகேஷ் கனகராஜும் பல தருணங்களில் தான், விஜய்யுடன் இணைவதை உறுதிப்படுத்தினார். 


இவர்கள் இணையும் படம் விஜய்யின் 67-வது படம் என்பதால், தளபதி 67 என அழைக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளும் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. மேலும் படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது. ஆனால் அது குறித்த புகைப்படம் இன்னும் வெளியாகவில்லை


இந்த நிலையில் இப்படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அப்டேட்டுக்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இப்படத்தில் நடிப்பதாக பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.அத்தோடு விஜய்யுடன் 10 வது முறையாக இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement