• Sep 20 2024

யாரும் எதிர்பாராத வகையில் வெளியாகிய தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ- வேற லெவல் குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 67 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இதுவரை தளபதி 67 அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்றிலிருந்து அடுத்தடுத்து சர்ப்ரைஸ் ட்ரீட் கிடைத்து வருகிறது. 


முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்த படக்குழு, அடுத்து  படப்பிடிப்பிற்காக காஷ்மீருக்கு சென்றுள்ளது.இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று தளபதி 67 படத்தில் நடிக்க உள்ள நடிகர் மற்றும் நடிகை குறித்த அறிவிப்பை ஒரு மணி நேரத்திற்கு ஒன்றாக அதிரடியாக வெளியிட்டது படக்குழு.


 இதில், ஆக்ஷன் கிங் அர்ஜூன், கௌதம் மேனன், இயக்குநர் மிஸ்கின், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடன இயக்குநர் சாண்டி, பிரியா ஆனந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர்.


இந்த நிலையில் தான் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் விஜய்யின் 67வது படத்தின் பூஜை போடும்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement