• Nov 17 2024

தளபதி 67 டைட்டிலுக்கு ரெடியான விஜய்… தெறிக்கவிடப் போகும் லோகேஷ்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம், தமிழ், தெலுங்கு மொழிகளில் பொங்கல் ஸ்பெஷலாக  திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், எஸ்ஜே சூர்யா, குஷ்பு உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்குகிறார். எனினும் இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைகிறார் விஜய். தற்காலிகமாக 'தளபதி 67' என்ற டைட்டிலில் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ள  லோகேஷ், கமலின் விக்ரம் பட ஸ்டைலில் ஒரு டீசரை ஷூட் செய்யவுள்ளாராம்.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் வெளியாகும் முன்பே, கமலின் விக்ரம் படம் குறித்த அப்டேட் அபிஸியலாக வெளியானது.அத்தோடு  2020ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி கமலின் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸான இந்த டீசர் தான், விக்ரம் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற வைத்தது. 

அடர்ந்த காட்டுக்குள் மரத்தால் செய்யப்பட்ட வீட்டினுள்ளே, நவீன துப்பாக்கிகளை எல்லாம் ஒழித்து வைத்துவிட்டு அரசியல்வாதிகளுக்கும் போலீஸார்களுக்கும் தடபுடலாக விருந்து கொடுப்பார் கமல். அதன்பின்னர் என்ன நடக்கும் என்பதை ரசிகர்கள் யோசிக்கட்டும் என விட்டுவிட்டு, படத்தின் டைட்டில் 'விக்ரம்' என தெரிவித்தனர்.

விக்ரம் டைட்டில் டீசரில் 'ஆரம்பிக்களாங்களா' என கமல் கேட்பது பயங்கர ட்ரெண்ட் ஆனது.அத்தோடு  இரண்டே நாட்களில் மொத்தம் இரண்டு நிமிடங்களுக்கு ஷூட் செய்யப்பட்ட அந்த டைட்டில் டீசர் தான், இரண்டு வருடங்கள் கழித்தும் வெளியான விக்ரம் மீதான எதிர்பார்ப்பை அதே ஹைப்பில் வைத்திருந்தது. எனினும் இப்போது அதே ஸ்டைலில் தளபதி 67 படத்திற்கும் டைட்டில் டீசரை முதலில் ஷூட் செய்யலாமென லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். விஜய்யும் அதற்கு ஓக்கே சொல்லி ஷூட்டிங் தேதிக்காக வெயிட்டிங்கிள் உள்ளாராம். மேலும் இந்த முறை விஜய் ரசிகர்களுக்காக இன்னும் ஸ்பெஷலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 67 லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்குமென ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், தளபதி 67 படத்தில் கமல், சூர்யா, கார்த்தி ஆகியோரும் கேமியோ ரோலில் நடிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, தளபதி 67ல் விஜய்யின் கேங்ஸ்டர் லுக் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். அதேபோல், இந்தப் படம், ஹாலிவுட்டில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற படத்தின் ரீமேக்காக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement