• Sep 20 2024

தளபதி 68 படத்திற்கு வந்த பெரும் சிக்கல்.. பூஜை போடுவதற்கு முன்பே இப்படியொரு நிலைமையா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருவதை நாம் அனைவரும் அறிவோம். லியோ படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கிறார்.

யுவன் இசையமைக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. இதுவரை இப்படத்திற்கு பூஜை கூட போடாமல் இருக்கும் நிலையில், பெரும் சிக்கல் ஒன்று கிளம்பியுள்ளது.

தளபதி 68 திரைப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் வழங்கப்படவுள்ளது. இதனால் கண்டிப்பாக இப்படத்தின் பட்ஜெட் நினைத்து கூட பார்க்க முடியாத தொகையாக இருக்கும்.

இதனால் தளபதி 68 படத்தின் டிக்கெட் விலையும் 2000, 3000 ரூபாய்க்கு விற்கப்பட வாய்ப்பு உள்ளது இதை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்ய கூடாது என்றும், தளபதி 68 படத்தின் டிக்கெட் ரூ. 120 க்கு மட்டுமே விற்கப்பட வேண்டும் என்றும் கூறி பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது.

இதை தளபதி 68 படக்குழு எப்படி சரி செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement