வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய்நடிப்பில் அவரின் 68வது படத்தில் வெளிவர இருக்கின்றது. இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் விஜய், வெங்கட் பிரபு, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் தயாரிப்பு தரப்பினர் ஆகியோர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் அக்டோபர் 3ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் பாடல் காட்சியுடன் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகியிருந்தது. இந்த பாடல் காட்சிக்காக ஏ.ஐ டெக்னாலஜி பயன்படுத்தி உருவாக்குவதாக கூறப்படுகிறது. இப்போது இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!