வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள படம் 'வாரிசு'. இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நஷனல் கிரஸ் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது இவர்களோடு இணைந்து பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் 'வாரிசு' திரைப்படமானது பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
அந்தவகையில் 'வாரிசு' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்கு முன்னதாக வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிம்பு பாடிய 'தீ தளபதி' பாடல் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி வெளியானது.
ரஞ்சிதமே பாடலைத் தொடர்ந்து இந்தப் பாடலும் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப்பாடல் யூடியூபில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
#TheeThalapathy hits 30M+ views now 🔥
— Sri Venkateswara Creations (@SVC_official) December 28, 2022
▶️ https://t.co/ULvDBSqNaC#Thalapathy @actorvijay sir @directorvamshi @SilambarasanTR_ sir @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @AlwaysJani @dop_gkvishnu @iamSandy_Off @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal #VarisuSecondSingle pic.twitter.com/3gYwwo2NDI
Listen News!