வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் குடும்ப படமாக உருவான 'வாரிசு' திரைப்படமானது ஜனவரி 11-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இப்படமானது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி இருக்கின்றது. பொங்கல் பண்டிகையையொட்டி வந்த இப்படத்தினை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றார்கள். அதுமட்டுமல்லாது ரொம்ப காலம் கழித்து க்யூட் விஜய்யை பார்த்துவிட்டோம் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
இப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வேட்டையினையும் நடாத்தி வருகின்றது. அதாவது நேற்று விடுமுறை நாள் இல்லை, இருப்பினும் நேற்று இந்தியாவில் மட்டும் சுமார் ரூ. 17 கோடி வசூல் செய்திருக்கிறது வாரிசு என தகவல் வெளியாகி தளபதி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அந்தவகையில் நேற்று துணிவு படம் இந்தியாவில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளது. வாரிசு படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் 7 நாட்களில் உலக அளவில் ரூ. 210 கோடி வசூலித்துள்ளது வாரிசு என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
Triple ah received your love in 7 days nanba 🔥#MegaBlockbusterVarisu crosses 210Crs+ collection worldwide 😎#VarisuHits210Crs#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries#Varisu #VarisuPongal pic.twitter.com/aVS6vGYhhY
மேலும் தளபதி விஜய்யின் கோட்டையான கேரளாவில் வாரிசு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அத்தோடு இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் வாரிசு படம் பார்க்க பலரும் தியேட்டருக்கு படையெடுத்து வருகிறார்கள்.
மேலும் விஜய்யின் மாமியார் வசிக்கும் நாடான இங்கிலாந்திலும் வாரிசு படம் சூப்பராக வசூல் செய்து வருவதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் அங்கு ரிலீஸான 6 நாட்களில் 700,000 பவுண்ட் வசூல் செய்துள்ளது வாரிசு திரைப்படம்.
அதுமட்டுமல்லாது வாரிசு படத்தை இங்கிலாந்தில் வினியோகம் செய்த அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய்யின் 'வாரிசு' மற்றும் 'வாரிசுடு'வுக்கு இங்கிலாந்தில் நல்ல வசூல். 2ஆவது வாரத்திலும் அனைத்து பெரிய ஸ்கிரீன்களிலையும் வாரிசு தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா ஏரியாலயும் ஐயா கில்லி டா என தெரிவித்துள்ளது.
The highly anticipated reTTTurn of #ThalapathyVijay in #Varisu & #Vaarasudu has generated strong box office numbers in the UK, now collecting over £700k in just 6 days. We have retained all the biggest screens for Week 2 onwards! 🔥🙌
ALL AREALAYUM AIYA GHILLI DA 😎 pic.twitter.com/N3ngEmHScs
Listen News!