• Sep 20 2024

தளபதி நான் கிடையாது... அது எப்போதுமே விஜய் தான்... ரசிகரின் கூச்சலுக்கு பதிலளித்த விஷால்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் புதுமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'லத்தி'. திரைப்படம் ஆனது வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. 


அந்த விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் மற்றும் விஜய் 67 படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'லத்தி' திரைப்படத்தின் தமிழ் டிரைலரையும், காவல்துறை அதிகாரி ஜாங்கிட் லத்தி திரைப்படத்தின் தெலுங்கு டிரைலரையும் வெளியிட்டனர். 

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த அனைவரும் உரையாற்றினார்கள். அதில் விஷால் பேசிக்கொண்டு இருக்கையில் கூட்டத்தில் இருந்து ரசிகர் ஒருவர் எழுந்து நின்று புரட்சி தளபதி என்று கத்தினார். அதற்கு "இல்லை இல்லை, தளபதி என்றால் அவர்தான். நான் புரட்சி தளபதி இல்லை, என் பெயர் விஷால் மட்டுமே" என விஷால் பெருந்தன்மையுடன் கூறினார். 


அதேபோல படத்தின் இயக்குநரான வினோத்குமார் மற்றும் தயாரிப்பாளர்கள் ரமணா - நந்தா பேசுகையில் "லத்தி திரைப்படத்தின் இறுதி 45 நிமிட காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். முழுக்க முழுக்க சண்டை காட்சிகளை பீட்டர் ஹெய்ன் அமைத்திருக்கிறார். டிரைலரில் இருப்பதைவிட படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் இருக்கிறது" எனத் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement