• Sep 20 2024

பிரபல்யமான நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தை தட்டிச் சென்ற தளபதி விஜய்- 2 ஆம் , 3 ஆம் இடங்களில் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காலத்தில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்பொழுது பல திரைப்படங்கள் திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.


அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான வலிமை, பீஸ்ட், விக்ரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படமும் வெற்றி பெற்றது.அந்தப் படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் வெற்றிக்கு, அவர்கள் தேர்வு செய்யும் இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றைத்தாண்டி ரசிகர்களின் ஆதரவு மிக முக்கியம்.


இந்த நிலையில்,  நாட்டில் பிரபலமான நடிகர்கள் பற்றிய ஒரு கருத்துக்கணிப்பை  ஆர்.மேக்ஸ் மீடியா நிறுவனம் நடத்தியது. இதில், நடிகர் விஜய் முதலிடத்தையும்   நடிகர் அஜித்குமார் 2வது இடத்தையும்,  சூர்யா 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


இது விஜய், அஜித், சூர்யா ஆகிய மூவரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு இவர்கள் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர்களாக வலம் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement