• Sep 20 2024

ஜவான் படத்தில் தளபதி விஜய்... வெளியான ட்ரெய்லர் வீடியோவில் மாட்டிய காட்சி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். மேலும் இப்படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி என்று நட்சத்திர பட்டாளங்கள் பலரும் குவிந்ததும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களை மத்தியில் மென்மேலும் தூண்டியுள்ளது.


அதுமட்டுமல்லாது இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் ஜவான் படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.


இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ஜவான் படத்தின் ட்ரெயிலர் வீடியோ ஒன்று ரிலீசாகியுள்ளது. அதில் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ள காட்சி வந்துள்ளது எனக் கூறி ரசிகர்கள் புகைப்படம் ஒன்றினை வைரலாக்கி வருகின்றனர்.


இருப்பினும் அது விஜய் தானா..? இல்லை ஷாருக்கானா...? என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியிருக்கின்றது. எனவே விஜய் நடித்தது உண்மை தானா என்பதை படம் வெளியாகும் வரைக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement