• Sep 20 2024

Super Singer ஷோவில் விஜய்யின் தந்தை... பார்க்க முடியாமல் கண்ணை மூடிய தமன்... வெளியானது அட்டகாசமான வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கி வருகின்றனர்.


இவர்கள் இருவரும் நகைச்சுவை நிறைந்த தமது பேச்சுக்களினால் நிகழ்ச்சியைப் போரடிக்காது கொண்டு சென்று வருகின்றனர். அந்தவகையில்  senior super singer-9 இடம்பெற்று முடிந்தமையைத் தொடர்ந்து தற்போது சிறியவர்களுக்கான 9-ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் வருகை தந்துள்ளார். அவர் குழந்தைகளுடன் இணைந்து டான்ஸ்ம் ஆடுகின்றார்.


மேலும் கண்ணோடு காண்பதெல்லாம் பாடலிற்கு விஜய்டிவி புகழ் தீபா ஓடிவந்து மேடையில் டான்ஸ் ஆடுகின்றார். இதனைப் பார்த்ததும் உடனே இசையமைப்பாளர் தமன் கண்ணை மூடிக் கொள்கின்றார்.


இதனைப் பார்த்ததும் அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது. இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement