• Nov 17 2024

‘தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி’ – சூப்பர் ஸ்டார் ரஜினியின் வைரல் ட்வீட்…!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

"இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல். தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் #தமிழன்டா என்ற ஹேஷ்டேகையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம், நாளை திறக்கப்பட உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு நன்றி கூறியுள்ளார். நாளை நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். 

மோடி தலைமையிலான பாஜக அரசின் ஒன்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம், திறக்கப்படுகிறது.

நாளை புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் இரவு  7 மணிக்கு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார். நாளை நடைபெறும் திறப்பு விழாவில் தமிழகத்தில் இருந்து 21 ஆதினங்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடினர். மதுரை, தருபுரம் ஆதீனங்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பின்னர் ஆதீனங்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி,  "உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் எனது இல்லத்திற்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவபக்தர்களாகிய உங்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது" என்றார்.

மேலும், "சுதந்திரத்திற்குப் பிறகு புனித செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான பதவி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இந்த செங்கோல் பிரயாக்ராஜ் ஆனந்த் பவனில் வாக்கிங் ஸ்டிக்காக காட்சிக்கு வைக்கப்பட்டது. நாங்கள் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளோம்" எனவும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement