இஞ்சின் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு தேச விரோதமாக விற்றதாக இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் 'ராக்கெட்ரி .
இப்படத்தை நடிகர் மாதவன் தானே இயக்கி தானே நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது வருகிறது. மேலும் திரை பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டி வரும் நிலையில் ரஜினிகாந்த், "ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும்,
குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணனின் வரலாற்றை தத்ரூபமாக நடித்து படமாக்கி இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தன்னையும் நிரூபித்திருக்கிறார் மாதவன்.
இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்கு அவருக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும்" என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு நடிகர் மாதவன் வீடியோ வடிவில் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், "என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னு தெரியல. இந்த பாராட்டு நம்பி நாராயணன் மற்றும் கடைசி வரைக்கும் போராடிய நம் படக்குழுவுக்கு தான் சேரும். ரஜினி சார் ரொம்ப நன்றி" என்று உருக்கமாக பேசியுள்ளார்.
பிற செய்திகள்
- நயன்தாராவுக்கு நடிகர் ஆர்யா வைத்த செல்லப் பெயர் என்ன தெரியுமா?- அட இது வரை தெரியாமல் போச்சே
- பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் நடித்துள்ள அருண் விஜய்
- பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரமின் புதிய லுக் போஸ்டர் ரிலீஸ்- அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்
- விஜயகாந்தின் வீட்டின் முன்னர் கூடும் ரசிகர்கள்-அவரின் உடல் நிலை குறித்து பேசிய மனைவி பிரேமலதா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!