• Sep 21 2024

பப்ளிசிட்டி செய்ய உதவிய அனைவருக்கும் நன்றி- விருமன் படத்துக்கான திடீரென நன்றி கூறிய சூர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விருமன் படம் வெற்றி பெற விளம்பர பப்ளிசிட்டி செய்ய பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, சூர்யா ஒரு பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கிராமிய பின்னணியில் உருவாகி வெளியாகிய திரைப்படம் தான் விருமன்.இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்திருந்தார்.அத்தோடு ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட என்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


இப்படத்தினை சூர்யாவின் 2டி நிறுவன் தயாரித்திருந்தது.இந்த நிலையில், விருமன் படம் வெற்றி பெற விளம்பர பப்ளிசிட்டி செய்ய பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, சூர்யா ஒரு பதிவிட்டுள்ளார். அதில், போஸ்டர் பப்ளிசிட்டி நந்தகுமார், பேப்பர் விளம்பரம் முபாரக் ஆகிய இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றிதெரிவித்துள்ளார் 


மேலும் கார்த்தி நடிப்பில் சர்தார் திரைப்படம் உருவாகி வருகின்றது. இதுவும் விரைவில் வெளியாகக் காத்திருக்கின்றது.அத்தோடு பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement