• Sep 20 2024

ஓவர் கிளாமரில் ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த தர்ஷா குப்தா... ஓஹோ இதுவும் பிக்பாஸ் போறதற்கான அறிகுறியா..? வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கவர்ச்சி மாடல் அழகியான தர்ஷா குப்தா ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இதனையடுத்து தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்பொழுது வெள்ளித்திரையில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் சன்னிலியோன் நடிப்பில் உருவாகியுள்ள ஓமை கோஸ்ட் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது பிக்பாஸ் சீசன் 7இலும் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்க இருப்பதாக கூறப்படுகின்றது.


தர்ஷா குப்தா நடிப்பில் எந்தளவிற்கு ஆர்வமாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்தவகையில் தற்போது ரொமாண்டிக் லுக்கில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கின்றார். 

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement