நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருபவரே நடிகர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி திறமை மூலமே இவருக்கு ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில் வெளியான 'மெரினா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், மனங்கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என பல நெஞ்சை விட்டு அகலாத படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி இருக்கின்றார். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களும் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் 'டாக்டர்' என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, அதேபோன்று இந்த வருட ஆரம்பத்தில் 'டான்' என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் ஆனது படக்குழுவே கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு படு மாஸான வசூல் வேட்டையுடன் இணைந்து வெற்றி வாகை சூடியது. இவற்றைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' என்ற திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது.
இவ்வாறாக படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்ற சிவகார்த்திகேயனின் குடும்ப வாழ்க்கை பற்றி பார்த்தால் 2010-ஆம் ஆண்டு இவருக்கு ஆர்த்தி என்பவருடன் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இந்த ஜோடிகளின் நல்ல சிறப்பான குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அதுமட்டுமன்றி அண்மையில் தான் சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்தார். அவருக்கு குகன் தாஸ் என பெயர் வைத்துள்ளமை யாவரும் அறிந்த ஒரு விடயமே.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் மனைவி செய்த ஒரு விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அதாவது ஆர்த்தி தனது கணவர் பெயர் SK, மகன், மகள் பெயரை கையில் மெஹந்தி போட்டுப் புகைப்படமாக எடுத்துள்ளார். இதனைப் பார்த்த நம்ம sk ரசிகர்கள் அவருக்கு தமது பாராட்டும் மழையை தெரிவித்து இருக்கின்றனர். இந்தக் காலத்திலேயும் தனது குடும்பத்தோட பெயரையே மெஹந்தி போடுற அந்த நல்ல மனசு வேற யாருக்கு தான் வருமுங்க. நம்ம ஆர்த்தி இந்த விஷயத்தில ரொம்ப பெஸ்ட்.
பிற செய்திகள்
- ஜீ தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள அச்சும்மா…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!
- யாருமே பார்த்திராத சிவாஜி கணேஷன் புகைப்படம்…பெண்ணா..?ஆணா..?
- “ஜாக்கெட் கூட சரியாக ரெடி செய்யவில்லை”…திடீர் திருமணம் தொடர்பாக நட்சத்திராவின் பதிவு…ஆறுதல் தெரிவித்த ரசிகர்கள்..!
- ரம்பாவும் குஷ்பூவும் இந்தளவுக்கு நல்ல நண்பர்களா..? என்ன பண்ணி இருக்காங்க தெரியுமா..? கண்ணே பட்டிடும் போல இருக்கு..!
- “பணம் இருக்கு என்பதுக்காகவே சில மூஞ்சிங்க நடிக்க வருதுங்க”…ஆயிரம் தான் இருந்தாலும் இப்பிடியா சொல்லுறது..? சர்ச்சைக்குள்ளான ராதாரவியின் பேச்சு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!