• Sep 21 2024

அந்த நடிகரின் படம் தான் என்னுடைய முதல் மனைவியை எங்கிட்ட இருந்து பிரித்தது- ரவீந்தர் கூறிய ஷாக்கிங் நியூஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் ரவீந்தர் தனது முதல் மனைவியைப் பிரிய நட்புன்னா என்னனு தெரியுமா திரைப்படம் தான் காரணம் என வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ரெண்டிங்கில் இருக்கும் காதல் ஜோடியாக ரவீந்திரன் மற்றும்  மஹாலட்சுமி ஆகிய இருவரும் வலம் வருகின்றனர். ரவீந்திரன் உடல் எடை அதிகரித்தவராக இருப்பதே இவர்களின் திருமணம் ட்ரெண்டாவதற்கு காரணம் எனலாம்.

மேலும் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் அவர் பணத்திற்காக தான் இந்த திருமணத்தை செய்தார் என ட்ரோல்கள் வந்தன.


அதற்கெல்லாம் ரவீந்தர் - மஹா இருவரும் சேர்ந்து பேட்டி கொடுத்து பதிலடி கொடுத்தனர்.ரவீந்தருக்கும் இது இரண்டாம் திருமணம் தான். அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்த நிலையில் பிரிந்துவிட்டனர். அது பற்றி அவர் பேசி இருக்கிறார்.

அதாவது கவின் நடித்த 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தை தயாரித்ததால் தான் ரவீந்தருக்கு விவாகரத்து நடந்ததாம். அந்த படம் தயாரிப்பது மனைவிக்கு பிடிக்கவில்லையாம், அதனால் தான் விவாகரத்து ஆனது என கூறி இருக்கிறார். இதனால் இப்படத்தை ஏன் அவர் தயாரிக்க வேண்டாம் என்று கூறினார் என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement