தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் அஜித்.இவர் தற்போது துணிவு எனும் படத்தில் நடித்து வருகின்றார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. அப்படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறுஇருக்கையில் நடிகர் அஜித் தவறவிட்ட திரைப்படங்கள் குறித்த பெரிய லிஸ்ட் அனைவரும் அறிந்த விஷயம். அப்படி ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்திற்கு பதிலாக நடிகர் அஜித்திடம் கால்ஷூட் கேட்கப்பட்டது என கூறப்படுகிறது.
அத்தோடு அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க முடியாது என்று கூறியதால் தான் பிரசாந்த் ஜோடியாக சங்கர் தேர்வு செய்யப்பட்டார் என்ற தகவலும் அப்போதில் இருந்தே வதந்தியாக பரவியது.
மேலும் இது குறித்து சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் பேசியபோது, ஜீன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் தான் ஒப்பந்தமானார்கள்.
ஆனால் ஐஸ்வர்யா ராய் அஜித்தை வேண்டாமுன்றது, அவருக்கு பதிலாக அப்பாஸிடன் நடிக்க கேட்டது என்பது எல்லாம் உண்மையில்லை என தெரிவித்து இருக்கிறார்.
Listen News!