தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தத் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
30க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படமானது மல்ட்டி ஸ்டாரர் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் 30ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தின் டீசர் வெளியீடு நேற்றைய தினம் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது. இந்த டீசரை ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்களை கொண்டு படக்குழு வெளியிட்டது. சூர்யா, அமிதாப் பச்சன், மகேஷ் பாபு உள்ளிட்டவர்கள் இந்த டீசரை வெளியிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஏஆர் ரஹ்மான், சரத்குமார், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று விழாவை சிறப்பித்து படம் குறித்த கருத்துக்களையும் பகிர்ந்துக் கொண்டனர். அத்தோடு படத்தின் டீஸர் வெளியாகியும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, த்ரிஷா, மணிரத்னம் உள்ளிட்டவர்கள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் பேசினார்கள். தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி, இந்தப் படத்தை ரசிகர்களுக்கு வழங்குவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் இந்தப் படம் தங்கள் அனைவருக்கும் மிகவும் பெருமையை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் ஒருமுறை தவறவிட்டதாகவும் அதற்காக திட்டுவதற்காகத்தான் தன்னை அவர் அழைத்தார் என்று நினைத்து அவரது அலுவலகத்திற்கு சென்றதாகவும் ஆனால் நீ தான் பொன்னியின் செல்வனாக நடிக்க போகிறாய் என்று அவர் கூறியதைக் கேட்டதும் தனக்கு புல்லரித்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த மேடையை விட அந்த தருணம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த புத்தகத்தை பல ஆயிரம் பேர் படித்திருக்கிறார்கள்.. பேசியுள்ளார்கள். ஆனால் ஒரே ஆளாக இந்தக் கதையை திரைப்படமாக உருவாக்கியுள்ள மணிரத்னம் சாருக்கு தான் தலைவணங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.பல காரணங்களால் மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு முயற்சியை நடத்திக் காட்டியுள்ளார் மணிரத்னம் என்றும் ஜெயம் ரவி பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- அம்மா யாருங்க…மகள் யாருங்க சினிமா ரசிகர்களைத் திணற வைக்கும் நடிகை
- மார்க்கெட் குறைந்தாலும் ஹீரோவாகத் தான் நடிப்பேன்; பிடிவாதம் பிடிக்கும் காமெடியன்
- “நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் தளபதியுடன் நடிப்பேன்”..நிறைவேறுமா? இவருடைய ஆசை!
- பாரின் சரக்கு- கலைஞர் சினிமாவில் தமிழை ஆதரித்தார்; வாரிசு ஸ்ராலின் ஆட்சியில் ஆதரவில்லையோ?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!