பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசும் படமாக ' வெளிவந்த படமே சித்தா' இப்படம் . எவ்வித கமர்ஷியல் பூச்சும் இல்லாமல் எதார்த்தமான சினிமாவாக வெளிவந்நிருக்கின்றது. இப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோவான சித்தாத்தும், அவரது அண்ணன் மகளாக சிறுமி சாய்ஸ்ரா ஸ்ரீயும் தங்களது யதார்த்த நடிப்பால் 'சித்தா' படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.இது பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றது.
இப்படம் அனைவருக்குமான விழிப்புணர்வு படமாக வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது. படத்திற்கு குவிந்து வரும் நேரான விமர்சனத்தால் திரையரங்குகளில் இப்படத்தன் ரசிகர்கள் அதிகரித்தனர். இந்நிலையில் உலகம் முழுவதும் 'சித்தா' படம் வெளியான ஐந்து நாட்களில் ரூ. 11.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவர்கள் வெளியாகி இருக்கின்றன.
Listen News!