• Sep 20 2024

‘அந்த சீன் வேறொரு நடிகர் பண்ண வேண்டியது..’ பரோட்டா காமெடி சீன் குறித்து சூரி பகிர்ந்த சுவாரிஸ்ய பேட்டி..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்டிங் ‘விடுதலை’ திரைப்படம். காமெடியானாக வலம் வந்து கொண்டிருந்த சூரியை கதாநாயகனாக மாற்றி வெற்றிமாறன் விடுதலையில் அமைத்திருந்த திரைக்கதை அனைவருக்கும் பிடித்து போனது. சூரியின் மற்றொரு பரிணாமம் அனைவரையும் ஆச்சரியம்மூட்டி இருக்கிறது. 

இந்த இடத்தை பிடிப்பதற்கு சூரி கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல.வருடக்கணக்கில் காத்திருந்த தவத்தின் பலனையே தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறார். இதெற்கெல்லாம் ஆரம்பபுள்ளி வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம் பெற்ற புரோட்டா காமெடிதான். ஆம், அந்த காமெடியின் மூலமாக சூரி அனைவருக்கு தெரிந்த முகமாக மாறினார். அந்த ஆரம்பபுள்ளி சூரிக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து நடிகர் சூரி  சேனல் ஒன்றுக்கு  கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது, ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தில் நான் ஒரு இரண்டு சீன்கள் நடித்தேன். அந்த படத்தில் இயக்குநர் சுசீந்திரன் உதவி இயக்குநராக வேலை பார்த்தார்.

அந்த படம் முடிந்த பின்னர் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பின்பு சுசீந்திரன் என்னை அழைத்து கபடி சம்பந்தமான ஒரு கதை இருக்கிறது அதில் நான் நடிக்க வேண்டும் என்றார். அத்துடன் ஆறு மாதங்கள் இங்கு தான் இருக்க வேண்டும்; வேறு வாய்ப்புகளை தேடிச் செல்லக்கூடாது என்றும் கட்டளையிட்டு இருந்தார். மூன்று நாட்கள் அங்கு அவரை சென்று சந்திப்பதும் பின்பு திரும்புவதுமாக இருந்தேன். ஒரு நாள் அவரிடம் தயவு செய்து எனக்கு படத்தின் டைரக்டரை பார்க்க வேண்டும் என்று கேட்டேன். எங்கு சென்றாலும் அந்த படத்தின் டைரக்டரை பார்த்து நடித்துக் காட்ட வேண்டும் என்பது என்னுடைய ஆசை.உடனே சுசீந்திரன் உனக்கு படத்தில் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லியாயிற்று.

 பின்னர் என்ன நடித்துக் காட்டுகிறேன் என்று நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதன் பின்னர் என்னை தனியாக அழைத்து உட்கார வைத்து, இந்த படத்திற்கு நான் தான் டைரக்டர் என்று சொன்னார். உடனே அண்ணே என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.. உடனே அவர், ஏன் நான் எல்லாம் டைரக்டர் ஆக கூடாதா என்று கேட்டார். நான் அவர் அந்த படத்தில் துணை இயக்குநராகவோ அல்லது அசோசியேட் டைரக்டராகத்தான் இருப்பார் என்று நினைத்தேன்.

ஆறு மாதங்கள் ரிகர்சல்கள் நடந்தன. அதன் பின்னர் வெண்ணிலா கபடி குழு படபிடிப்பு தொடங்கியது. அந்த பரோட்டா காமெடியும் வந்தது. ஆனால் பரோட்டா காமெடியில் முதலில் நடிக்க இருந்தது நான் இல்லை. அதில் நடிக்க இருந்தது அண்மையில் மறைந்து போன வைரவன். அனைத்து ரிகர்சலிலும் வைரவன் தான் அந்த காட்சியை செய்வதாக இருந்தது. 

திடீரென்று சுசீந்திரன் குண்டாக இருப்பவன் அதிகமாக சாப்பிடுவான் என்பது சகஜம் தான். ஊர் பக்கத்தில் எல்லாம் பாம்பு வயறை கொண்டு இருக்குகிறாயா... ஒல்லியாக இருப்பவன் தான் அதிகமாக சாப்பிடுவான் என்று சொல்வார்களே என்று சொல்லி, அந்த கதாபாத்திரத்தை என்னை செய்யச்சொன்னார். அன்று தொடங்கிய அந்த புரோட்டா காமெடி தான் இன்று என்னை இந்த இடத்தில் வந்து அமர வைத்திருக்கிறது.” என்று பேசினார்.


Advertisement

Advertisement