• Nov 14 2024

சிங்கம் புலி காதில் அஜித் கூறிய அந்த விஷயம்... மறுநாளே நடந்த சம்பவம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் நடித்திருந்த திரைப்படம் 'உன்னைத் தேடி'. இந்தப் படத்தின் கதையை சுந்தர்.சி அவர்களின் இல்லத்தில் 7 நாட்கள் எழுதியவர் சிங்கம் புலிதானாம். 

மேலும் அந்த படத்தின்போது கிட்டத்தட்ட 60 நாட்கள் நடிகர் அஜித்திடம் கதை கூறுவது வசனம் சொல்வது என்று அவருடன் பயணம் செய்யும் வாய்ப்பு சிங்கம் புலிக்கு கிடைத்ததாம்.

 படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் படம் ஓடுமா ஓடாதா என்ற சந்தேகம் அஜித்திற்கு இருந்ததாம். எனினும் அப்போது கண்டிப்பாக இந்தப் படம் ஓடும் என்று சிங்கம் புலி கூற, அப்படி ஓடினால் என் படத்தை இயக்க உனக்கு வாய்ப்பு தருகிறேன் என சிங்கம் புலியிடம் கூறினாராம் அஜித்.



உன்னைத் தேடி திரைப்படம் வெற்றிகரமாக ஓடி அதனுடைய நூறாவது நாள் விழாவை காமராஜர் மெமோரியல் ஹாலில் நடந்தபோது சிங்கம் புலியின் காதருகே சென்று,"நீ கூறியது போலவே படம் வெற்றியடைந்துவிட்டது. நாளை நிக் ஆர்ட்ஸில் சென்று உன்னுடைய கதையை சொல்லிவிட்டு வா என்று கூறினாராம்.மேலும் அப்படித்தான் ரெட் திரைப்படம் துவங்கியதாக சிங்கம் புலி கூறியுள்ளார்.

அத்தோடு தன்னுடைய இரண்டாவது படமான மாயாவியில் கூட நடிகர் சூர்யாவை அஜித் ரசிகர் போல காட்டியிருப்பார் சிங்கம் புலி. படம் இயக்கினாலும் அடுத்ததாக நான் கடவுள் படத்தில் இயக்குநர் குழுவில் பணியாற்றினார் சிங்கம் புலி. அதிலும் முதலில் அஜித் தான் கதாநாயகனாக நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாடலில் ரெட்ட சுழி உள்ள பைய கட்டிலுக்கு கெட்ட பய என்கிற வரி இருக்கும். 



எனினும் அதனை அஜித்திடம் சிங்கம் புலி காட்டியதற்கு,"யோவ் ஏற்கனவே பல பிரச்சனை ஓடிட்டுக்கிட்ருக்கு இந்த மாதிரிலாம் ஏன் எழுதி வாங்கிட்டு வர" என்று கேட்டாராம். பின்னர் அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் அதனை காட்ட,"அவருக்கு எங்கையா ரெட்ட சுழி இருக்கு?"என்று ஒளிப்பதிவாளர் கேட்க, கிராபிக்ஸ் மூலம் நாம் வைத்துக் கொள்ளலாமா என்று சிங்கம் புலி கேட்டிருக்கிறார். அதற்கு,"யோவ் இந்த மாதிரில்லாம் பண்ணா உன்ன அஜித் அடிச்சிடப் போறாரு, சும்மா இருயா" என்று ஒளிப்பதிவாளர் கூறியதாக ரெட் திரைப்படத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை சிங்கம் புலி சொல்லியுள்ளார்

Advertisement

Advertisement