• Sep 21 2024

அதெல்லாம் பொய்யுங்க- நெல்சன் தீயாக வேலை செஞ்சிட்டு தான் இருக்காரு- பிரபல காமெடி நடிகரின் பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இயக்குநராக இருந்து வெள்ளித்திரையில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்டவர் தான் நெல்சன் திலீப்குமார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கினார்.

இப்படமும் பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்றதை அடுத்து தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்னும் படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை என்பதோடு மோசமான விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சன் ரஜினியின் 169 படத்தை இயக்கவுள்ளார். பீஸ்ட் படத்தின் சொதப்பலான திரைக்கதையை தொடர்ந்து நெல்சன் சூப்பர்ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு தொடருமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் ரஜினியை வைத்து படம் இயக்குவது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் நெல்சனின் நண்பரான ரெடின் கிங்ஸ்லி இந்தப் படம் குறித்தும் நெல்சன் குறித்தும் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். தலைவர் 169 படத்தின் விவாதங்கள் முடிந்து தற்போது படத்திற்கான திரைக்கதையை அவர் எழுதி வருவதாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தலைவர் 169 படத்தின் திரைக்கதையை எழுதுவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதில் எந்த அளவிலும் உண்மை இல்லை என்றும் இதுபோன்ற தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நெல்சன் மிகவும் தீவிரமாக உள்ளதாகவும் ரஜினி படத்தில் அவர் கண்டிப்பாக அனைவரையும் கவர்வார் என்றும் ரெடின் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement