தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் பவர் புல்லான நடிகர்கள் தான் அஜித் மற்றும் விஜய். இவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் விஜய் படத்துக்கு 300 தியேட்டரும், அஜித் படத்துக்கு 800 தியேட்டரும் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.இது குறித்து பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் கூறிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
“விஜய்யும், அஜித்தும் பெரிய ஹீரோக்கள். அதில் விஜய் படத்துக்கு 300 தியேட்டரும், அஜித் படத்துக்கு 800 தியேட்டர்லாம் கொடுக்க மாட்டாங்க. அது மனசாட்சி இல்லாத செயல். இரண்டு படங்களுக்கும் 50 சதவீத தியேட்டர்கள் கண்டிப்பாக கிடைக்கும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் 2 பேருமே முக்கியமான நடிகர்கள். ஆனால் ஆந்திராவில் அப்படி இல்லை. அங்குள்ள தயாரிப்பாளர்கள் அந்த மொழி படம் ஓட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அவர்கள் வாரிசு படம் அங்க ரிலீஸ் ஆக கூடாது என சொல்லவில்லை. இது டப்பிங் படம் என்பதால் குறைந்த அளவிலான தியேட்டர்கள் ஒதுக்குவோம் என்று தான் சொல்கிறார்கள்.
வாரிசு படத்தின் தயாரிப்பாளரும் தெலுங்கு, இயக்குநரும் தெலுங்கை சேர்ந்தவர். அங்குள்ள ஹீரோக்கள் அவர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு தரும்போது அவர்கள் ஏன் தமிழ் ஹீரோக்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்து தமிழ் சினிமா மார்க்கெட்டை கெடுக்கிறார்கள். தற்போது 25 கோடி அதிகமா கொடுத்துட்டா அந்த ஹீரோ அடுத்து தமிழ் தயாரிப்பாளருக்கு படம் பண்ணும்போது 25 கோடி குறைப்பாரா. என் கவலை அதுதான்.
வாரிசு படம் தெலுங்கில் நிச்சயம் ரிலீஸ் ஆகும். 35 சதவீத தியேட்டர்கள் அங்கு வாரிசு படத்துக்கு ஒதுக்கப்படும். விஜய்க்கு அங்க அவ்வளவுதான் மரியாதை. தமிழ் ஹீரோக்கள் ஆந்திரா பக்கம் போனதே தப்பு. தமிழ் ஹீரோக்கள் தமிழ் தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள். இங்க 25 ஆயிரம் தொழிலாளர்கள் இதை நம்பி இருக்கிறார்கள். பல கோடி சம்பளம் தருகிறார்கள் என்று ஐதராபாத், மும்பையில் ஷூட்டிங் வைத்துக் கொள்கிறீர்களே உங்களுக்கெல்லாம் என்ன தமிழ் பற்று இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் தமிழ் தொழிலாளர்களை காப்பாற்றுங்கள்” என அவர் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!