• Sep 20 2024

பழைய சீரியலிலே அப்படித்தான் நம்ம கோபி-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தற்போதைய காலகட்டத்தில் தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

மேலும் இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, திவ்யா கணேஷ், வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அத்தோடு இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது.

இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கின்றது. மேலும் பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை உணர்த்துகிறது.

இவ்வாறுஇருக்கையில் கோபி காரெக்டரில் நெகடிவ் ரோலில் நடித்து வருபவர் சதிஷ்குமார். மேலும் அவர் கோபி ரோலில் நடித்து வருவதால் அவரை திட்டாதவர்கள் இருக்க மாட்டார்கள்.மேலும் அந்த அளவுக்கு மோசமான கதாப்பாத்திரம் அது. மனைவி மற்றும் குடும்பத்துக்கு தெரியாமல் கள்ள காதலி உடன் சுற்றும் ரோல் தான் அது.

பாக்கியலட்சுமி சீரியலுக்கு அதிகம் ரேட்டிங் கிடைக்க கோபியின் கதாபாத்திரமும் முக்கிய காரணம் என்று தான் கூற வேண்டும். இப்போது தான் அவர் சீரியலில் வில்லனாக நடிக்கிறார் என பார்த்தால் இளம் வயதிலேயே றெக்கை கட்டி பறக்கும் மனசு என்கிற தொடரில் அவர் வில்லனாக நடித்து இருக்கிறார்.

ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ளும் நபராக அவர் நடித்து இருக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. ராஜ் டிவியில் அந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறதாம்.

வீடியோ இதோ..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement