• Sep 20 2024

அடேங்கப்பா...முதல் நாளே இத்தனை கோடி வசூலா - ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவூட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த், தன்னுடைய ரசிகர்களுக்கு ஜெயிலர் படம் மூலம் பெரிய விருந்து ஒன்றே போட்டுள்ளார். ரஜினிக்கு கட்டாய வெற்றியை தர வேண்டிய கட்டாயத்தில இருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

அனிருத் இசை, கதாபாத்திரங்கள் தேர்வு என அனைத்திலும் சிறப்பான பங்களிப்பு இருந்ததால், ஜெயிலர் படத்தின் வெற்றி உறுதியானதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். என்ன இருந்தாலும், படத்தின் ஒன் மேன் ஆர்மி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். 

அந்த வகையில், சூப்பர் ஸ்டாருக்கு பெரிய வெற்றியை நீண்ட இடைவெளிக்குப் பின் ஜெயிலர் தந்திருக்கிறது. அந்த உற்சாகத்தில் தான் , அவர் இமய மலைக்குச் சென்றதாகவும் கூறுகின்றனர். இது ஒருபுறமிருக்க, ஜெயிலர் படம் வெளியான முதல் நாளே, ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்பதிவை அடிப்படையாக வைத்து உத்தேசமாக கணிக்கப்பட்ட முடிவுகளின் பட,  ஜெயிலர் திரைப்படம் முதல்நாள் வசூல் அமோகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி, முதல் நாள் மட்டும் 105 கோடி ரூபாய் வரை ஜெயிலர் வசூல் சாதனை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது ,இனி வரும் நாட்களில் பாகுபலி,பதன் படங்கங்களின் வசூலை முறியடிக்கலாம்.

உத்தேச பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்:

தமிழ்நாடு- ரூ.26 கோடி முதல் ரூ.28 கோடி

ஆந்திரா/ தெலங்கானா- ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி

கர்நாடகா- ரூ.11 கோடி முதல் ரூ.13 கோடி

கேரளா- ரூ.4.5 கோடி முதல் ரூ.6 கோடி

இந்திய நகரங்கள்- ரூ.10 கோடி வரை

வெளிநாடு- ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி

முதல் நாள் வசூலாக ரூ.85 கோடி முதல் 105 கோடி வரை வசூலாகியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள், துல்லியமான விபரங்களை தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிட வாய்ப்பு உள்ளது.எனவே பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement