• Nov 11 2024

அடேங்கப்பா..! சூர்யா கார்த்தியின் ஒரு வேளை சாப்பாட்டின் விலை இவ்வளவா? மனம் திறந்த சிவகுமார்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகுமார் கடந்த 1941 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் மாதம்பட்டியில் பிறந்தவர் கடந்த 1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தில் சுரேந்தர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் கந்தன் கருணை என்ற திரைப்படத்தில் முருகன் வேடம் ஏற்று நடித்திருந்தார் இந்த வேடம் இவருக்கு அவ்வளவு அற்புதமாக பொருந்தி வந்தது .இந்த திரைப்படமும் பட்டி தொட்டி எங்கும் ஹீட் அடித்த வெற்றி படமாக அமைந்தது.நடிகர்கள் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில் நடிகர் சிவகுமார் முருகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக 2001 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு நடிப்பில் இருந்து விலகிக் கொண்ட இவர் மேடைப் பேச்சாளராக பயணித்து வருகிறார். 

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய வாழ்க்கையை மூன்று பகுதியாக என்னால் பிரித்துப் பார்க்க முடிகிறது என கூறியிருந்தார்.

ஓவியனாக ஏழு ஆண்டுகள், சினிமா நடிகனாக 40 ஆண்டுகள், மேடைப்பேச்சாளராக 10 ஆண்டுகள். தற்போது, சூர்யா கார்த்தி என குடும்பத்துடன் ஒரு ஹோட்டலுக்கு மதிய உணவு சாப்பிடு சென்றால் அசால்டாக 15,000 ரூபாய் செலவாகிறது. ஆனால், 60களில் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை ஓடி ஆடி நான் சம்பாதித்த மாத சம்பளமே  7500 தான்.

அப்போது என்னுடைய தேவைகள் குறைவாக இருந்தது. இருப்பதை வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தேன். கிடைக்கும் இடத்தில் உறங்குவேன். அதன் பிறகு சினிமாவிற்கு வந்தேன் சினிமாவுக்கு வந்த பிறகு எனக்கு வசதி வாய்ப்புகள் கிடைத்தது. அதற்காக சினிமாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

யார் வேண்டுமானாலும் என்னுடைய சினிமா வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். சினிமாவில் நான் செய்த விஷயங்களை சாதித்து விட முடியும். ஆனால் நான் ஆரம்ப காலத்தில் ஓவியனாக இருந்தபோது பட்ட கஷ்டங்கள் தற்பொழுது மேடை பேச்சாளராக பத்து ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் இந்த ஒரு பகுதி ஆகியவற்றை என்னைத் தவிர யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என்ற ஒரு கர்வம் எனக்கு இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார் நடிகர் சிவகுமார்.

Advertisement

Advertisement