தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கல்கி அவர்களின் அற்புத படைப்பாக வெளிவந்த இந்த பொன்னியின் செல்வன் நாவல் இன்று வரை பல கோடி மக்களின் மனதை வென்றுள்ளது. இந்த பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் திரை வடிவமாக்கி சாதனை படைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் போன்று ஒரு மிகப்பெரிய நாவலை வெறும் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கியுள்ள இயக்குநர் மணிரத்னம் கிட்டத்தட்ட 120 நாட்களுக்குள் இந்த இரண்டு பாகங்களுக்கான மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளார் என்பது தான் மிகப்பெரிய சாதனை.
இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருள்மொழிவர்மன் எனும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, வல்லவரையன் வந்திய தேவனாக கார்த்தி, நந்தினி மற்றும் ஊமை ராணி என்கிற மந்தாகினி ஆகிய இரண்டு கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், குந்தவை பிராட்டியாக த்ரிஷா, சுந்தரச் சோழராக பிரகாஷ்ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், சேந்தன் அமுதனாக அஸ்வின் கக்கமன்னு, பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரவி தாஸனாக கிஷோர், திருக்கோவிலூர் மலையமானாக லால், வானதியாக ஷோபிதா ஆகியோரோடு இணைந்து இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நேற்று மார்ச் 29ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினரோடு, முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது பேசிய இயக்குநர் பார்த்திபன், பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்திற்கு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், முதல் பாகம் 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது, போல் இரண்டாம் பாகம் அதைவிட இரண்டு மடங்காக வசூலிக்கும் என நம்புவதாகவும்" தெரிவித்துள்ளார். எனவே பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!