இளையராஜா , AR ரகுமான் இருவரும் காதல் பாடல்களில் ஜாம்பவான்களாக இருந்த போது புதுமையான இசையுடன் இசையமைப்பாளர் தேவா இடையில் வந்தது போன்று தற்காலத்தில் அனிருத் , யுவன் சங்கர் ராஜாக்கு இடையில் குத்து பாட்டுக்கள் மூலம் ஹிட் கொடுத்து வந்தவர் விஜய் ஆண்டனி ஆவார்.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக புதிய பரிமாணத்தில் பணியாற்றும் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிச்சைக்காரன் திரைப்படத்தின் மூலமே பெரிதும் அறியப்பட்டார். இவ்வாறு இருக்கையில் விநாயக் இயக்கத்தில் மிருணாளினியுடன் இணைந்து "ரோமியோ" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
குறித்த திரைப்படத்திற்க்காக யூடியூப் தளம் ஒன்றில் கலந்துரையாடும் பொழுது இரு கூலிப்பெண்கள் இவருடன் புகைப்படம் எடுப்பதற்காக கூச்சமாக நின்றனர் அவர்களை அருகில் அழைத்து தோழில் கைபோட்டவாறு செல்ஃபீ எடுத்துள்ளார். மற்றும் தெருவில் வெறும்காலு டன் நின்று அவரது ரசிகர்கள் அனைவருடனும் செல்ஃபீ எடுக்கும் வீடியோ காணொளி வைரலாகி வருகின்றது.
Listen News!