நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என திரைத்துறையில் பன் முகத் திறமை கொண்டவரைாக வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி. கடந்த 2005ல் சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.தொடர்ந்து நான் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் அண்மையில் தன்னுடைய மூத்த மகளை பறி கொடுத்தார். அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவிப்பதோடு தான் மீண்டும் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.அதுவும் தற்போது மீண்டும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க உள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 6ம் தேதி அவரது ரத்தம் படம் வெளியாகவுள்ள நிலையில், அதையொட்டி பேசிய அவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் நடிப்பில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும், கற்று கொள்ள வேண்டிய விஷயங்களும் அதிகமாக இருந்ததால், இசையமைப்பில் இருந்து விலகியிருந்ததாகவும் தற்போது சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தன்னுடைய இசைக் கச்சேரி, தனக்கான தன்னம்பிக்கையை மீண்டும் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடத்தப்பட்டுள்ள இசைக் கச்சேரி, இசையமைப்பாளராக தற்போதும் தன்னை ரசிகர்கள் அதிகமாக விரும்புவதை எடுத்துக் காட்டியுள்ளதாகவும் அதனால் பெரிய நடிகர்களின் படங்களுக்கு பிஜிஎம் இல்லாமல் பின்னணி பாடல்களை மட்டும் எடுத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிப்பில் உள்ள நுணுக்கங்கள், பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை தான் ஓரளவுக்கு தெரிந்துள்ளதாகவும் அடுத்ததாக நடிப்பு, இசையமைப்பு இரண்டிலும் கவனம் செலுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Listen News!