பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளனர்.இவரது நடிப்பில் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.
மேலும் பிரபல பாலிவூட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார். யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50 வது படமாக பதான் உருவாகி உள்ளது.பதான் திரைப்படம், பான் இந்தியன் படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும், வரும் ஜனவரி 25 ஆம் தேதியன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து, பதான் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இருந்தது. தமிழில் இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார். இது குறித்து விஜய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"பதான் படத்துக்காக ஷாருக்கான் சார் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் விஜய்க்கு நன்றி சொல்லி ஷாருக் கான் குறிப்பிட்டு செய்த டுவிட் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.அதில் அவர் கூறியதாவது "மிக்க நன்றி நண்பா, இதனால் தான் நீங்க தளபதி. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம். லவ் யூ" என தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!