• Sep 20 2024

இதுக்குத்தானா 10 வருஷம் உழைச்சாங்க! அந்த விஷயங்களில் சொதப்பிய கவினின் ''டாடா'' படம் !

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நடிகர் கவினின் நடிப்பில் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு லிப்ட் திரைப்படம் வெளியாகியிருந்தது . இதனை  தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் டாடா திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

 ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர், டிரெய்லர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆனால் இப்போது வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது என்று  சொல்லலாம் .

அறிமுக இயக்குநர் கணேஷ் ஜி பாபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இந்த ஜோடியுடன் இணைந்து பாக்கியராஜ், ஐஸ்வர்யா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படி முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தும் படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படியாக ஆறு குறைகள் இருக்கிறது.

என்னவெனில் படத்தின் திரைக்கதையை பொருத்தவரையில் பல படங்களில் நாம் பார்த்த கதை தான். அதனால் இதில் புதுசாக சொல்வதற்கு என்று எதுவும் இல்லை. அதேபோன்று அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை ரசிகர்கள் யூகிக்கும் படியாக திரைக்கதை அமைந்துள்ளது. இது படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி காட்சி வரை தொடர்வது சற்று சலிப்பை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம் .

அதேபோன்று கவினின் அம்மா அப்பாவாக வரும் ராசுக்குட்டி ஜோடி அதாவது பாக்கியராஜ், ஐஸ்வர்யா இருவரும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. மேலும் கவின், அபர்ணாதாஸ், குழந்தை ஆகிய மூவருக்கும் சுத்தமாக கனெக்ட் ஆகவில்லை. இதனாலேயே படம் மெதுவாக நகர்வது போல் தோன்றுகிறது. அதிலும் முதல் பாதி ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் சில இடங்களில் லாஜிக் மீறல்களும் இருக்கிறது. அதாவது ஹீரோ, ஹீரோயின் இருவரும் சென்னையில் தான் இருப்பார்கள். ஆனால் நான்கு வருட காலமாக அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. இதனால் தான் இப்படம் சுமார் ரகத்தில் இணைந்து இருக்கிறது. 

அந்த வகையில் இப்படத்தை எடுப்பதற்கு எதற்காக பத்து வருஷம் உழைத்தார்கள் என்று தெரியவில்லை.

இப்படி பல குறைகள் இருந்தாலும் கவினின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயம் பிடிக்கும். 

ஏனென்றால் அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தையும் அவர் நிறைவாக செய்திருக்கிறார். இதுதான் படத்தின் ஒரே பலமாக இருக்கிறது. அந்த வகையில் அவருக்காக மட்டுமே டாடா படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement