• Sep 20 2024

மர்மமான முறையில் இறந்த ஹாலிவுட்டின் 18 வயது இளம் நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் மட்டுமின்றி கொரிய சினிமா உலகிலும் ஹாலிவுட் திரையுலகிலும் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பலரும் மர்மமான முறையில் இறப்புக்குள்ளாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், ஹாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக இருப்பவர் தான் டைலர் சாண்டர்ஸ். இவர் Just Add Magic என்னும் படத்தில் நடித்ததற்காக எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.

அந்த வகையில் ஹாலிவுட்டின் இளம் நடிகர் டைலர் சாண்டர்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்தது அவருடைய ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அவருக்கு வெறும் 18 வயது தான் . இப்படி இருக்கையில் கடந்த வியாழனன்று உயிரிழந்த இவரது மரணம் தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஹாலிவுட்டில் 10 வயது முதலே பல படங்கள் மற்றும் டிவி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் டைலர் சாண்டர்ஸ். கடந்த 2017ம் ஆண்டு 'Fear the Walking Dead' எனும் பிரபல தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருந்தார். இளம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் இவ்வளவு சீக்கிரம் உயிரிழந்தது பலரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.

சமையல் புத்தகத்தில் உள்ள மேஜிக்கை கொண்டு உருவாக்கப்பட்ட Just Add Magic வெப்சீரிஸில் லியோ எனும் கதாபாத்திரத்தில் நடித்த டைலர் சாண்டர்ஸ் கடந்த 2019ம் ஆண்டு கெவின் சார்போ நடிப்பில் வெளியான 'The Reliant' படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement