• Sep 20 2024

SK-இன் பிரின்ஸ் படத்தின் 2nd போஸ்டரும் ரிலீஸ்-பெயருக்கு ஏற்ற மாதிரி தான் இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.சமீபத்தில் இவர் நடித்த டான் திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுத்த நிலையில் இவரது SK 20 படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இப்படத்தை இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரேன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகின்றார்.

எஸ்.கே 20-வது படத்திற்கு பிரின்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இதன் முதலாவது போஸ்டர் நேற்று வெளியாகியது.அதில் எஸ்.கே உலக உருண்டையை கையில் வைத்தபடி சிவகார்த்திகேயன் போஸ் கொடுத்திருக்கிறார்.

இந் நிலையில் இதன் இதன் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் மற்றும் உக்ரைன் நாட்டு நடிகை மரியா ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளார்கள். இந்த இரண்டு போஸ்டர்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement