• Sep 20 2024

ரஜினிக்கு ஜோடியாகும் 32 வயது நடிகை.. இது என்ன புது ருவிஸ்டா இருக்கு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது சம்மந்தமாக வெளியான போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது.அத்தோடு அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது.

போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் ஒன்றும் இடம்பெறவில்லை.

சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அத்தோடு ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் மற்றொரு கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்திற்கு ஜோடியாக தமன்னா நடிப்பது இதுவே முதல் முறையாகும். அத்தோடு விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement