கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பவித்ரா லோகேஷ் கடந்த 2007-ஆம் ஆண்டு சுரேந்தர் பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில் இந்த ஜோடிக்கு ஒரு மகனும் உள்ளார்.
தற்போது 44 வயதாகும் பவித்ரா லோகேஷும் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷ் பாபுவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அதுமட்டுமல்லாது கடந்த சில மாதங்களாக இருவரும் லிவ்விங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வாழ்ந்தும் வந்தனர். இதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது.
அந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக புத்தாண்டன்று பவித்ராவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தபடி வீடியோ வெளியிட்டு தாங்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதை உறுதிப்படுத்தி இருந்தார் நரேஷ். இதனையடுத்து இன்றைய தினம் நரேஷ் - பவித்ரா லோகேஷ் ஜோடிக்கு திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று உள்ளது.
அந்தவகையில் அவர்கள் இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டபோது எடுத்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.'
இந்நிலையில் நரேஷ் பாபுவுக்கு இது நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நரேஷ், தற்போது பவித்ரா லோகேஷை நான்காவது மனைவியாக திருமணம் செய்து இருக்கிறார்.
நரேஷ் பாபு 60 வயதில் திருமணம் செய்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் "பல்லுபோன வயசுல உங்களுக்கு பக்கோடா கேக்குதா" என கிண்டலடித்து வருகின்றனர்.
Seeking your blessings for a life time of peace & joy in this new journey of us🤗
ఒక పవిత్ర బంధం
రెండు మనసులు
మూడు ముళ్ళు
ఏడు అడుగులు 🙏
మీ ఆశీస్సులు కోరుకుంటూ ఇట్లు
- మీ #PavitraNaresh ❤️ pic.twitter.com/f26dgXXl6g
Listen News!