• Nov 14 2024

பிரபல நடிகையை வலுக்கட்டாயமாக காதலித்த நடிகர்..கடைசியில் ராதிகாவையுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  இயக்குநர் இமயம் என்று புகழப்பட்டு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் பாரதிராஜா. மேலும் இவர் இயக்கத்தில் அறிமுகமாகி தற்போது டாப் இடத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் பலர் இருக்கிறார்கள். அந்தவரிசையில் 1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர் தான் சுதாகர்.

தெலுங்கு பேசும் நடிகரை பாரதிராஜா அறிமுகம் செய்து வைத்தார். இதன்பின்னர் தென்னிந்திய திரையுலகில் டாப் இடத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் சுதாகர். எனினும் தற்போது சுதாகர் தன்னுடன் நடித்த நடிகைகளை காதலித்துள்ள விசயத்தை பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.


நடிகை ராதிகாவுடன் சில படங்களில் நடித்த சுதாகர், அவரையும் காதலித்து பின் பிரிந்துவிட்டார். அதன்பின்னர் நடிகை ஜெயசித்ராவை வலுக்கட்டாயமாக சென்று ரோஜா பூ கொடுத்து காதலித்து வந்துள்ளார்.

நான் காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூட மிரட்டியதா ஜெயசித்ராவை தெரிவித்து இருக்கிறாராம். அதனால் வேறுவழியில்லாமல் அவரை காதலித்தேன்.


ஆனால் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டுமென்று சுதாகர் கேட்டதாகவும் அதற்கு நான் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன் எல்லாம் உனக்குத்தானே என்று ஜெயசித்ரா சொன்னதாகவும் அதன்பின் கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சுதாகர் என பயில்வான் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement