• Nov 17 2024

இரண்டாம் திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கித்தவிக்கும் நடிகர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விளையாட்டு பிள்ளையாக இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர் அந்த நடிகர். தனக்கு எது செட்டாகுமோ? தனக்கு என்ன வருமோ அதை சரியாக தேர்வு செய்து நடித்து வருகின்றார். இதனால் மினிமம் கேயாரண்டி நடிராக உள்ளார்.

மேலும் கல்லூரி நாட்களிலேயே சினிமா குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார் நடிகர். இதன் பின்னர் சினிமாவில் பிரபலமான பின்னர் பலருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஒரு குழந்தை பிறந்த பின்னர் காதல் மனைவியை திருமணம் செய்த நடிகர், பிரபலம் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து செட்டிலானார்.

அத்தோடு நடிகரின் தயாரிப்பாளர் கனவை நிஜமாக்கியதால் அந்த பிரபலத்தை நடிகர் திருமணம் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் இரண்டாவது திருமணத்திற்கு பின்னர் நடிகருக்கு எந்த விஷயமும் சரியாக நடக்கவில்லை.

சக நடிகரை ஏமாற்றி மோசடி செய்ததாக கோர்ட் கேஸ் என அலைந்து வருகிறார் நடிகர். அடுத்ததாக படங்களுக்கு வலுத்த எதிர்ப்பு, வெளியான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஷைன் ஆகாமல் போனது என அடுத்தடுத்து அடிமேல் அடி வாங்கி வருகிறார் நடிகர்.

போதாகுறைக்கு சமீபத்தில் இரண்டாவது மனைவி எடுத்த புகைப்படமும் வெளியாகி நடிகர் சமூக வலைதளங்களில் ரோஸ்ட் ஆனார். காதல் மனைவியை குழந்தையுடன் தவிக்கவிட்ட பாவம்தான் இதற்கு காரணம் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement