தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி வேடத்திலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர் தான் மதன்பாபு . ஆரம்பத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் சில காலம் படவாய்ப்பின்றி இருந்தார்.
மேலும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கனடா சென்று விட்டதாகவும் அதன் பிறகு தற்போது நஷ்டத்தை சரிக்கட்டிய பின்னர் மீண்டும் சென்னை திரும்பி விட்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
இது தவிர ஒரு தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கிறேன் என்றும் ஒரு கன்னட படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன் என்று கூறிய மதன்பாபு, முருகதாஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ’1947’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன் என்றும் காண்ட்ராக்டர் நேசமணி என்ற படத்தில் யோகிபாபுவுக்கு அப்பாவாக நடிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ரீ எண்ட்ரி ஆகியுள்ள காமெடி நடிகர் மதன்பாப்-க்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.
Listen News!