தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் தெரியாதவர்களே இல்லை என்று தான் கூற முடியும். அதாவது "சூப்பர் ஸ்டாரு யார் என்று கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்" அப்படீன்னு ஒரு பாட்டே இருக்குங்க. அந்த அளவுக்கு சின்னப்பசங்க முதல் பெரியவங்க வரைக்கும் அனைவரிட மனசிலேயும் இடம் பிடிச்ச ஒருவர் தான் நம்ம ரஜினிகாந்த். இவரது நடிப்பிற்கும், ஸ்டைலுக்கும் என்றே இவருக்கு ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.
திரையுலகத்தை பொறுத்தவரைக்கும் யாருமே வானத்தில இருந்து குதிச்சவங்க கிடையாது. பலரும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து தமது திறமையினாலும், கடின உழைப்பினாலும் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் தான். அதே போன்று தான் நம்ம ரஜினிகாந்தும். இவர் ஆரம்பத்தில் ஒரு பஸ் கண்டெக்டராக இருந்தவர் என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமே.
சினிமாவில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் இன்று வரைக்கும் தன்னுடைய நடிப்பினால் ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றார் என்றால் அது ரஜினிகாந்த் தான். இந்தநிலையில் அச்சு அசல் இவரைப் போலவே நடிக்கக் கூடிய நடிகர் ஒருவர் அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவில் இருந்திருக்கின்றார்.
இவர் நடிப்பில் மட்டுமன்றி தோற்றத்திலும் நடிகர் ரஜினிகாந்த் போலவே இருப்பதால் முதலில் அதிகளவிலான பாராட்டுக்களையும், வரவேற்பினையும் பெற்றிருக்கின்றார். இதுவே அந்த நடிகருக்கு வினையாக மாறியது போன்று அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தினால் பல இன்னல்களையும் சந்தித்து இருக்கின்றார். அந்த நடிகர் யார் தெரியுமா?
அவர் வேறு யாரும் இல்லைங்க 'காதல் காதல் காதல்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்த நடிகர் நளினிகாந்த் தான். அதனைத் தொடர்ந்து பாராட்டத்தக்க வகையில் இவரும் பல படங்களில் நடித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது இவர் ரஜினிகாந்த் போலவே உருவ ஒற்றுமையையும் கொண்டிருந்தார். ரஜினிகாந்த் செய்வது போலவே படங்களில் இவரும் செய்யத் தொடங்கினார்.
இதனால் இயக்குநர்கள் பலரும் ரஜினிகாந்த்திற்குப் போட்டியாக நளினிகாந்த்தை இறக்கி இருந்தனர். எனினும் ரஜினிகாந்த் அளவிற்கு அவரால் வெற்றியைக் கொண்டு வர முடியவில்லை. அதாவது சினிமா வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஒருக்கட்டத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் அளவிற்கு நளினிகாந்த்தை கொண்டாடவில்லை. இதனாலோ என்னவோ சினிமாவில் இவரால் பெரியளவிலான ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. எனினும் இவர் தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- இந்தப் பிரபல நடிகரும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகின்றாரா?…வெளியாகிய தகவல்
- பணத்திற்கு ஆசைப்பட்டுத்தான் இவ்வாறு செய்கின்றார்களா..?அந்த வரிசையில் இணைந்த சூர்யா..!
- “அரசாங்கம் அடிக்கடி power cut செய்து மக்களுக்கு உதவும்”; தமிழக அரசை கிண்டலடித்த நடிகை கஸ்தூரி..வைரலாகும் ட்விட்டர் பதிவு
- கொஞ்சம் ஓவரா தான் போறாங்க…படு கவர்ச்சி உடையில் அமலா பால்…வெளியான புகைப்படங்கள்..!
- பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கின்றாரா..? குழப்பத்தை கிளப்பிய நெட்டிசன்கள்..! காரணம் இதுவா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!