• Sep 20 2024

பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினிக்கு முதல் கதாநாயகியாக நடிக்க கமிட்டானது இந்த நடிகை தானாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

பிரிந்த வாழும் கணவன் மற்றும் மனைவியின் வாழ்க்கை நிலையை எடுத்துக்் காட்டுவதால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் கதாநாயகியாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டவர் நடிகை ரோஷினி.

இவர் தனது சொந்த காரணங்களால் சில மாதங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். இவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நடிகை ரோஷினி, இந்த சீரியலில் முதலில் நடிக்க தேர்வாகவில்லையாம். முதன் முதலில் கண்ணம்மாவாக நடிக்கவிருந்தது பவித்ரா ரெட்டி என்பவர் தானாம்.

ஆனால், அப்போது ஏற்பட்ட சில காரணங்களால் பவித்ரா ரெட்டியால் நடிக்கமுடியாமல் போக, அதன்பின் ரோஷினி கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது போல் உறுதியற்ற தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement