• Nov 14 2024

1000 படங்களுக்கும் மேல் நடித்தும் கட்டின புடவையுடன் ரஜினி வாசலில் உதவி கேட்டு நின்ற நடிகை- நடந்தது என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அனைவர் நெஞ்சங்களிலும் குடிகொண்ட நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 50 வருடங்களாக சினிமாவில் ஒரு ராஜ்ஜியத்தை நிலை நாட்டி வருகிறார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றது. வசூலில் எம்ஜிஆருக்கு அடுத்தப் படியாக வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார் ரஜினி.

 70 வயதை கடந்தாலும் இன்று வரை இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்க கூடிய வகையில் சும்மா ராஜ நடை போட்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்.தற்போது கூட அவருக்கு கைவசம் மூன்று படங்கள் வரிசை கட்டி கொண்டு நிற்கின்றன. ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து விட்டு தன் மகளின் இயக்கத்தில் லால்சலாம் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.


ஓய்வு எடுக்கின்ற வயதிலும் இன்னும் அதே சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் இளைஞர்களுக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் ரஜினி ஒரு நடிகைக்கு செய்த உதவியை பற்றி மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார். கிட்டத்தட்ட அந்த நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 1000 படங்களுக்கும் மேல் நடித்தவராம். சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் இருந்திருக்கிறார்.

பெரும்பாலான படங்களில் வெடுக்குத்தனமாக பேசக்கூடிய கதாபாத்திரத்தில் அற்புதமாக நடிக்கக் கூடியவர். இப்படி பல புகழை அடைந்த நடிகை ஒரு நேரம் எந்த வித பணமும் இல்லாமல் கட்டிய புடவையுடன் நடிகர் ரஜினியை போய் சந்திந்திருக்கிறார். நேராக அவரை பார்த்து ‘இப்பொழுது என்னிடம் எதுவும் இல்லை, சொந்த ஊருக்கு போவதற்கு கூட காசு இல்லை, நிராயுதபாணியாக கட்டிய புடவையுடன் தான் வந்திருக்கிறேன், எதாவது உதவி செய்யுங்கள் ’ என்று சொன்னாராம்.


உடனே ரஜினி தன் பக்கத்தில் இருந்த 40000 ரூபாயை கையில் கொடுத்து அடுத்து என்ன பண்ண வேண்டுமோ அந்த வேலையை பாருங்கள் என்று சொல்லி அனுப்பினாராம். ஆனால் இதை சற்றும் எதிர்பாராத அந்த நடிகை ஊருக்கு போக காசு கொடுப்பார் என்று தான் நினைத்தாராம். ஆனால் இவ்ளோ தொகையை கொடுப்பார் என்று நினைக்க வில்லையாம். அதை வைத்து அடுத்த கட்ட வேலையை பார்க்க ஆரம்பித்தாராம் அந்த நடிகை. அவர் வேறு யாருமில்லை. நேற்று நம்மை விட்டு பிரிந்த சரத்பாபுவின் முதல் மனைவியான நடிகை ரமாபிரபாதானாம். இந்த செய்தியை செய்யாறு பாலு கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement