• Sep 21 2024

விஜய் வீட்டின் அருகே 35 கோடிக்கு புதிய வீடு வாங்கிய நடிகை...அதுவும் யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என லோகேஷ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தற்போது நீலாங்கரையில் வசித்து வருகிறார். அவருடைய வீட்டை அனைவரும் பார்த்திருப்போம்.

இவ்வாறுஇருக்கையில், விஜய்யின் வீட்டின் அருகே ரூ. 35 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான புதிய வீட்டை வாங்கியுள்ளாராம் நடிகை திரிஷா.


ஏற்கனவே அஜித் வீட்டின் அருகே ரூ. 5 கோடி மதிப்பில் ஃபிளாட் ஒன்றை வாங்கியிருந்த திரிஷா, தற்போது புதிதாக வீடு ஒன்றை விஜய் வீட்டின் அருகே வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.


நடிகை திரிஷா பல ஆண்டுகளுக்கு பின் விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 படத்தில் நடிக்கிறார்.  எனினும் சமீபத்தில் நடந்த தளபதி 67 படத்தின் பூஜையில் கூட திரிஷா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement