நடிகை பூர்ணா, நடிகர் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஷாம்னா காசிம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்பெயராக பூர்ணா என்றே ரசிகர்களால் அறியப்படுகிறார்.
அருள்நிதி நடித்த தகராறு, சசிக்குமாரின் கொடிவீரன், சவரக்கத்தி உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் பிசாசு-2 படம் ரிலீசாக உள்ளது.
கேரளாவை சார்ந்த மலையாள நடிகையான பூர்ணா, சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.
மேலும் கணவர் வீட்டில் நடந்த தமது வளைகாப்பு புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பூர்ணா பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நடிகை பூர்ணா மேலும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் தனது கணவர் ஆசிப் அலியுடன் வளைகாப்பின் போது வீடியோ காலிங் செய்து பேசும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூகவலைத்தங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் பூர்ணாவின் தாய் - தந்தையர் ஆசிர்வாதம் செய்யும் புகைப்படங்கள், பூர்ணா வளையல்கள் குலுங்க சிரிக்கும் புகைப்படங்கள், இனிப்பு வகைகளை உண்ணும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூர்ணா வெளியிட்டுள்ளார்.
Listen News!