• Nov 19 2024

மூன்றாவது முறையாக திருமண ஏற்பாடுகளில் பிஸியாக இருந்து வரும் நடிகை- இந்த முறை என்ன வைரஸ் வருகின்றதோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2012ம் ஆண்டு ரிலீஸான ஃபக்ரி படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம் காதலர்களாகியவர்கள் தான் நடிகர் அலி ஃபாசல் மற்றும், நடிகை ரிச்சா சதா. 7 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் கடந்த 2020ம் ஆண்டு திருமணத்தில் இணையவுள்ளனர் என்று கூறப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிச்சாவிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, எப்பொழுது எல்லாம் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கிறோமோ, அப்பொழுது எல்லாம் புது வகை கொரோனா வைரஸ் வருகிறது. 2020ம் ஆண்டில் திருமணத்திற்கான இடங்களை எல்லாம் புக் செய்துவிட்டோம். ஆனால் முதல் அலை வந்து லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது என்றார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் திருமண பேச்சை துவங்கினோம். இரண்டாவது அலை வந்து நாசம் செய்துவிட்டது என்று கூறினார்.

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்களாம். அவர்களின் திருமண விழா மும்பை மற்றும் டெல்லியில் நடக்கவிருக்கிறதாம். இந்த முறையாவது திருமணம் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement